வெள்ளி, டிசம்பர் 30, 2011


  
மதத்தின் இரகசியம்

மனிதனில் ஏற்கனவே இருக்கிற தெய்வீகத்தை வெளிபடுத்துவதே மதம்.

மதம் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது,
சமூக விஷயங்களில் தலையிட அதற்கு எந்த உரிமையும் இல்லை என்பதைக் குறிப்பாக நீங்கள் நினைவில் வைக்க வேண்டும்.
ஏற்கனவே விளைந்துள்ள தீமைகள் அனைத்தும் அப்படித் தலையிட்டதன் காரணமாகவே என்பதையும் மறக்க்க் கூடாது.

ஒரு மதம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அது உத்வேகம் மிக்கதாக இருக்க வேண்டும்.
அதேவேளையில் அதில் உட்பிரிவுகள் பெருகிக் கொண்டே போகின்ற அபாயத்தையும் தடுக்க வேண்டும்.
பிரிவினைவாதம் அற்ற பிரிவாக இருப்பதன் மூலம் இதை நாம் தடுக்க முடியும்,
ஏனெனில் இதில் ஒரு பிரிவிற்கான அனுகூலாங்கள் அனைத்தும் இருக்கும்,
உலகம் தழுவிய ஒரு மத்த்திற்கான பரந்த தன்மையும் இருக்கும்.

எப்போது ஆன்மா அன்பான இறைவனின் தேவையை, ஆசையை, ஏக்கத்தை உணருமோ அப்போதுதான் மத உணர்வே ஆரம்பிக்கிறது, அதற்கு முன்பு அல்ல.

மதத்தின் இரகசியம் கொள்கைகளில் இல்லை, செயல்முறையில்தான் உள்ளது.
நல்லவனாக இருப்பது,
நன்மை செய்வது
இதுதான் மத்த்தின் முழுப்பரிமாணம்.

புலன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் ஆசை தோன்றும் போதுதான்
மனிதனின் இதயத்தில் மத உணர்வு உதயமாகிறது.
ஆகவே மனிதன் புலன்களுக்கு அடிமையாகாமல் தடுப்பதும், அவன் தன் சுதந்திரத்தை வலியுருத்த உதவி செய்வதும்தான் மதத்தின் முழு நோக்கம்.

என்னென்ன தீமைகளுக்கு மதம் காரணம் என்று சொல்கிறார்களோ அவை எதற்கும் மதம் காரணமாக அல்ல.
எந்த மதமும் மனிதர்களைகளைக் கொடுமைப் படுத்தவில்லை, எந்த மதமும் சூனியக்காரிகளைக் கொளுத்தவில்லை,
எந்த மதமும் இத்தகைய செயல்களைச் செய்யவில்ல. அப்படியானால் இவற்றைச் செய்யும் படி மக்களைத் தூண்டியது எது?
அரசியல்,
ஒருபோதும் மதம் அல்ல.
மதமத்தின் பெயரில் அரசியல் நிலவுமானால் அது யாருடைய தவறு ?

மனிதன் இறையனுபூதி பெற வேண்டும், அவரை உணர வேண்டும், அவரைப் பார்க்க வேண்டும், அதுதான் மதம்.

மதம் என்பது அனுபூதி.
வெறும் பேச்சோ,
நம்ப முயற்சிப்பதோ,
இருட்டில் தேடுவதோ,
முன்னோர்களின் வார்த்தைகளைக் கிளிப்பிள்ளை போல் ஒப்பித்துவிட்டு அதுதான் மதம் என்று நினைப்பதோ,
மத உண்மைகளை அரசியலாக்குவதோ மதம் அல்லவே அல்ல.

ஒரு லட்சிய மதத்தின் நோக்கம்
இந்த வாழ்விற்கும் உதவ வேண்டும்.
மறு உலகிற்கும் வழிகாட்ட வேண்டும்.
அதே வேளையில், மரணத்தை ஏற்க அது ஒருவனை ஆயத்தம் செய்யவும் வேண்டும்.

மதத்தை பற்றிக்கொண்டு சண்டையில் இறங்காதே,
மதச் சண்டைகளும் வாதங்களும் அறிவின்மையின் அறிகுறி. தூய்மையும் அறிவும் வெளியேறி, இதயம் வறளும்போதே சண்டைகள் தொடங்கும், அதற்கு முன்னால் அல்ல.

கொள்கைகளையோ, நம்பிக்கைகயையோ, மதப் பிரிவுகளையோ கோயில்களையோ பொருட்படுத்தாதே. ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையிலும் சாரமாக அமைகின்ற அறிவுடன் ஒப்பிட்டு பார்த்தால் அவை என்ன?
ஒரு மனிதனிடம் இந்த அறிவு முதிரும் அளவிற்கே,
நம்மை செய்யும் ஆற்றல் அவனிடம் அதிகாரிகின்றது.
முதலில் அந்த அறிவை தேடிப் பெறு. யாரையும் குறைகூறாதே.
ஏனேனில் எல்லா கொள்கைகளிலும் முடிவுகளிலும் சிறிதாவது நன்மையுள்ளது.
மதம் என்பது கொள்கைகளோ கோட்பாடுகளோ அல்ல, அனுபூதியே மதம்.
அதை உனது வாழ்க்கையில் காட்டு.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக