சனி, டிசம்பர் 17, 2011


பயம், சந்தேகம், சலனம் வேண்டாம்


ஒன்று கூடிக் கடவுளை வணங்கிச் செல்லும் போது, 

மனிதர்களின் மனங்கள் ஒருமைப்பட்டுத் தமக்குள் இருக்கும். 

ஆத்மவொருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடமுண்டாகும். 

எனவே தான் நம் முன்னோர் கோயில்களை உருவாக்கினார்கள்.

சிவன் நீ; சக்தி உன் மனைவி. விஷ்ணு நீ; லட்சுமி உன் மனைவி.
பிரம்மா நீ; சரஸ்வதி உன் மனைவி. 

இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரை தேவநிலைக்கு 
கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப்பள்ளிக்கூடங்களே கோயில்கள் ஆகும்.

சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந்தடையாக வந்து கொண்டிருக்கிறது.

சகல மனிதரும் சகோதரர். சகோதர உணர்ச்சியைப் பற்றி கவிதைகள் பாடுவதும், நீதி நூல்கள் புகழ்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது.

 ஆனால், நடைமுறையில் எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அது நடைமுறைக்கு வர வேண்டும்.

சக்தியால் உலகம் வாழ்கிறது. நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

 ஒவ்வொருவனுக்கும் அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்று சக்திகள் வேண்டும். 
இந்த மூன்றும் நமக்கு இகலோக இன்பம் கிடைக்கும்படியாகவும், 

பரலோக இன்பங்கள் சாத்தியமாகும் படியாகவும் செய்கின்றன. ஆத்மா உணர்வாகவும், சக்தி செய்கையாகவும் உள்ளது.

விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இல்வுலகத்தை ஆளுகிறது. 

இதை பூர்வ சாஸ்திரங்கள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்கின்றன. 
பயம், சந்தேகம், சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். 
இதனால் சக்தி ஏற்படும்.




2 கருத்துகள்:

  1. adai oru sakthiyum silaiyai kumpidal varathu da athai nee purinthukol muthalil apram kadurai eluthu kallai kumpidal eppadyda sakthi varum

    பதிலளிநீக்கு
  2. சக்தியால் உலகம் வாழ்கிறது. நாம் வாழ்வை விரும்புகிறோம்.
    ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

    இன்னும் நீ முட்டாளாக இருப்பதை எண்ணி வருந்துகிறேன்.... சக்தியை வழிபட்டு பார் ஞானம் கிடைக்கும்.

    உன் உருவமில்லா மதத்ததை பின்பற்றி வாழ்வதை விடு..... உமிழ் நீரில் கழுவப்பட வேண்டிய உன் மதசார்கொள்ளையே உன் முட்டாள்தனமான, அநாகரிகமற்ற வார்த்தைக ளுக்கு காரணமாக உள்ளது...

    சக்தியால் உலகம் வாழ்கிறது. நாம் வாழ்வை விரும்புகிறோம்.
    ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு