வியாழன், டிசம்பர் 15, 2011



உண்மையான நல்ல தமிழர்கள் யார்?



யார் யாரெல்லாம் தங்கள் கலாச்சாரம் பண்பாடுகளைப்பேணி இல்லாதவர்கள் இல்லை நம் இனத்தில் என்று சொல்லும் வண்ணம் நல்லுள்ளத்தோடு ஏழ்மையில் இருப்போருக்கும் தங்களால் ஆன உதவிகளை செய்து வாழ்கின்றார்களோ அவர்களே நல்ல தமிழர்கள் மட்டுமின்றி உயர்ந்த மானிடர்களாகின்றார்கள் இவ்வுலகில்.
இன்று நாம் வளிநாடுகளில் உணவுக்கு வறுமையற்ற வாழ்வினை மேற்கொண்டிருக்கின்றோம்
ஆனால் நம்முடன் நாம் பிறந்த நாட்டில் பிறந்தவர்கள் தமிழர்கள் என்பதனால் பலவழகளிலும் வறுமையின் பிடிக்குள் திண்டாடுகின்றார்கள்,
செய்ய வேண்டியது ஒன்றே உங்களுக்கு மனமிருந்தால் நேரடியாக தேடிப்பிடியுங்கள் ஒரு துயருறும குடும்பத்தையோ நபரையோ பின்னர் உங்களாலான உதவியினை செய்யுங்கள் , நமது உறவினர்களுக்கு கொடுப்பது எல்லோரும் செய்துகொள்ளும் விடயமே ஆனால் நம்மை அறியாதவர்களுக்கு கொடுத்து அதை அவர்கள் வாங்கி மகிழும் பொழுதுதான் உங்கள் மனத்தில் ஒரு பொன் விளக்கொளி பிரகாசிக்கும் என்பதனை உணர்வில் தெரிந்து கொள்ளலாம்.
நக்கீரனின் அண்மைக்கால செய்திகளின் படி நமக்கு மிகுந்த வேதனை தரும் செய்தி என்னவெனில் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளே தமது மாணவ மாணவிகளுடன் தவறாக நடந்த நடக்க முயற்சித்தமை ,இது பலராலும் சகிக்கமுடியாத ஒன்றே ,தொழிலின் மீதான பக்தியின்மை மற்றும்
சமுதாயத்தில் தனது தொழிலுக்குரிய மரியாதை, நம்பிக்கை போனறவற்றை அறிந்து கொள்ளாமையே இந்த இழிசெயலுக்கு காரணம். தனக்கு கொடுக்கப்படும் மரியாதையை மதிப்பை தவறாக உபயோகிக்க முனைதல், வாழ்க்கையில் பெருங்களங்கததை உண்டுபண்ணி விடுகின்றது.
ஒரு சிலர் செய்யும் தவறு பண்புமிக்க புனிதமான ஆசிரியர்களுக்கும் அவப்பெயரை உண்டாக்கவல்லது.
மனதுக்குள் ஆசையில்லாத மனிதனே கிடையாது என்று வைத்துக்கொண்டாலும் , தான் சார்ந்த தொழில் சமூகவொழுக்கம் போன்றவற்றை கருத்தில்க்கொண்டு அடக்கம் பேணி வழ்பவரையே உலகம் போற்றும்,இதில் தனியாக ஆண்மக்களை மட்டும் குற்றம் சொல்லுவது பொருந்தாது
பெண்களும் ஆண்கள் மனங்களை சபலப்படுத்தாது தங்கள் நடை உடை அலங் காரங்களை பேணுதல் வேண்டும், பேரறிஞர் அண்ணாவின் கருத்து
இந்நேரத்தில் நினைக்கத்தக்கது “பெண்கள் அழகிகளாக இருக்கலாம் , ஆண்மயக்கிகளாக இருக்கக்கூடாது நமது முன்னோர்கள் பாதுகாப்புக்கருதியே பாலியல்த் தொல்லைகளுக்கு பெண்கள் ஆளாகக்கூடாது என்னும் நோக்கில் அதிகூடிய அலங்காரங்களுக்கு பண்பாட்டில் இம்கொடுக்காமல் சிறந்த செயல்முறைகளை சொல்லிவைத்தார்கள் , அதிலொன்று உதட்டுமேலே சிவப்பு சாயம் தீட்டாதே – கொவ்வை இதழ்கள் என்று இலக்கியத்தில் நாயகியை வருணிக்கின்றர்கள் என்றால் இயற்கையாக எந்த தீட்டுதலுமின்றி அவள் உதடு சிவப்பாக இருந்தது என்று பொருள்,
அதைப்படித்துவிட்டு கடையில் மூட்டைகட்டி சிவப்பு சாயம் வாஙகிவந்து தீட்டோ தீட்டென்று தீட்டினால் உதடு சிவப்பாகிவிடுமா, நமது தமிழ் மரபுக்கென்று இருக்கும் பண்பாடுகளை கடக்க முனையும் ஒவ்வொருவருக்கும் மறுமுனையில் ஆபத்து விரிந்து காத்துக்கிடக்கின்றது என்பதனை மக்கள் உணரவேண்டும். நமக்கு பொருந்தாதவற்றில் மோகம் கொள்ளுதல் அறிவாகாது ,தாய் தந்தையர் சொல்கேங்கள் ஏன் எதற்கு என்று சிந்தித்துக்கொள்ளுங்கள்.
அறிவுரை கூறுவோரை அவமரியாதை செய்வது இன்று பெருகியுள்ளது ,பிள்ளைகளுக்கு அடிக்க கூடாது என்னும் நாகரிகத்தில் வாழ்ந்து வருவதால் பிள்ளைகளின் சுதந்திரம் தவறான வழிகளுக்கு செல்லுவதற்கு இடம் கொடுக்கின்றது என்றால் மிகையில்லை, அன்றாடம் வேலைக்கு
சென்றிருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிளளைகளை நினைந்து மனதுக்குள் பெரும் பயம் கொண்டிருப்பது அவரவர் உள்ளமே அறியும் காரணம்
மான உணர்வுக்கு வாழ்வில் முக்கிய இடம் கொடுத்திருக்கும் இனம் எனபதினால் அந்தப்பயம்,அது பற்றி எள்ளளவும் சிந்திக்காதவர்களுக்கு எந்தக்கவலையுமில்லை .தரகர் பிடித்து பெண்பார்க்க சொன்னகாலம் போய் இன்று பெண்ணே தனக்குரியவனை இணையதில் தேடுகின்றாள்
என்னும் அளவுக்கு காலம் மாறியிருக்கின்றது,தொழில்நுட்ப வளர்வானது இனங்களின் கலாசார பண்பாடுகளையும் தூக்கிபோட்டு மிதிக்கின்ற து
இப்படித்தான் வாழவேண்டும் என்னும் உறுதியுடையோரை எதுவும் ஒன்றும் செய்ய முடியாது அவர்கள் என்றும் தங்கத்தின் தன்மையுடையவர்களே என்றும் நல்ல உண்மையான தமிழர்களாக கண்ணியமாக வாழ்க்கையை வழிநடத்திச்செல்வார்கள்.
எழுத்து
ம.இரமேசு
15 -12 -2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக