புதன், மார்ச் 14, 2012

 மனதை நாம் இயக்க வேண்டும்


அன்றாட வாழ்க்கையிலே நமக்குள்ளே எத்தனையோ பிரச்சனைகளும்,
உடல் உபாதைகளும், மனப்போராட்டங்களும் வந்தும், சென்று கொண்டுதான் இருக்கின்றன.
இவை எல்லவற்றிற்குமே மூலகாரணம் நம் மனதுதான்.
நம் மனது நினைத்தால், நம்மை எப்படியும் மாற்றிவிடும்.
அதி அற்புத சக்தி கொண்டது.
மாபெரும் ஆற்றல் அதனுள் ஒளிந்து கொண்டு இருக்கிறது. மனதின் சக்தியை மழுமையாய் உணர்ந்து செயல்படுபவர்கள் மட்டுமெ நிச்சயம் வெற்றி பெறுகிறார்கள்.
மனது மாபெரும் சக்திதான்.
அந்த மனது நம்மை இயக்குவதைவிட,
நாம்தான் மனதை இயக்க வேண்டும்.
நமது அனைத்துக் காரியங்களைலும், நம்மை வழி நட்த்திச் செல்கிறது. நம்மைக்  கோழை ஆக்குவதும், வீரனாய் மாற்றுவதும் மனதின் செயலே. 
இயற்கை நமக்கு அளித்திருக்கும் மாபெரும் சக்தி மனதுக்கு உண்டு.
ஒன்றை மட்டும் நன்கு தெளிவாக மனதில் நிலைநிறுத்துங்கள்.
மனது மாபெரும் சக்திதான். அந்த மனது நம்மை இயக்குவதை விட, நாம் தான் மனதை இயக்க வேண்டும்.
இதையே கவியரசு கண்ணதாசன் அவர்கள் அழகாகப் பாடி உள்ளார்.
கண் போன  போக்கிலே,
கால் போகலாமா!
கால் போன போக்கிலே
மனம் போகலாமா!
மனம் போன போக்கிலே
மனிதர் போகலாமா!
மனிதர் போன பாதையை
மறந்து போகலாமா!
மனதைக் கட்டுப் படுத்தி வாழ்வது என்பதே மகத்தான கலையாகும். நம் சித்தர்கள் அனைவரும் மனவளக்கலையை அறிந்தவர்கள்.
மனம் ஒரு குரங்கு என்றும் கூறுவார்கள். ஏனெனில் அது ஒரு நிலையில் நிற்காது. குரங்கைப் போல் அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும். அதைச் செய்வோமா, இதைச் செய்வோமா என சரியாக முடிவெடுக்காமல், கடைசியில் ஒன்றும் செய்யாமல் இருந்துவிடும். இல்லையென்றால் செய்ய வேண்டிய செயலையும் பாழாக்கிவிடும். இயற்கை படைத்துள்ள பஞ்ச பூதங்களின் சக்தியினைக் கூட ஓரளவிற்கு உணர்ந்துவிடலாம், ஆனால் மனிதனின் மனதை அறிவது சிரமமான காரியமாகும்.
மாபெரும் சக்தி கொண்ட கடவுளைப் போன்ற மனசு எங்கு இருக்கிறது. எப்படி நம்மை இயக்குகிறது ? புதிரான விசயமாகும்.
“ உடலில் வலு இல்லையெனினும்,
 மனதில் வலிமை இருந்தால் போதும்,
எடுக்கும் காரியம் வெற்றிதான்
ஒவ்வொரு நிமிடமும், பல வித்தியாசமான எண்ணங்களை விதைத்து, நம்மை ஆட்டிவைக்கும் மிக அற்புதமான சூத்திரதாரிதான் மனது.
மனதுக்கு மிஞ்சிய சக்தியே இல்லை. உண்மையைப் பொய்யாக்கவும், பொய்யை உண்மையாக்கவும் செய்யும் ஆற்றல் படைத்தது.
சோம்பித் திரிபவனுக்கும் புத்துணர்வு தந்து, எடுத்த காரியங்களில் வெற்றி பெற வைக்கும். ஒருவனின் வெற்றிக்குப் பின்னால், ஆணோ, பெண்ணோ இருக்கலாம் என்பார்கள். ஆனால், அவனின் வெற்றிக்கு அடித்தளமாய் அமைவது அவன் மனது மட்டுமே.
ஏனெனில், அவன் எடுக்கும் காரியங்களில் அவனை முழுமையாய் ஈடுபடுத்தி வேலை வாங்கச் செய்வது மனதே! உங்களுக்குள் இருக்கும் ஆற்றல்களை வெளிப்படத்துவீர்கள். அதற்கு முழுமுதற் காரணம் உங்கள் மனது மட்டுமே.
உங்களுக்குள் இருக்கும் அபூர்வ ஆற்றலைப் புரிந்து கொள்ளுங்கள் உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் சிறப்புடன் வாழவும், சாதிக்கவுமே பிறந்தவர்கள்.
சிலர் மனதைத் தளரவிட்டு, அமைதி எங்கே என அலைகிறார்கள். நீங்கள் விரும்பும் அமைதியை யாரும் உங்களுக்கு நிரந்தரமாக தரமுடியாது. அலைபாயும் மனதுடன் அலைய வேண்டியாதுதான்.
நமக்கு நாமே நீதிபதியாக இருந்து, நல்லது கெட்டது எதுவெனப் பகுத்துணர்ந்து செயல்பட வேண்டும். ஆதியில் நம் முன்னோர்கள் வனங்களில் எப்படியெல்லாமோ வாழ்ந்து, இயற்கையுடன் போராடி, இன்று படிப்படியாக நாகரீக வளர்ச்சி பெறவில்லையா?
வாழ்க்கையில் யாருக்குத்தான் பிரச்சனை இல்லை. அவரவர் வசதிற்கேற்ப பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எங்கே ஓடி ஒளிய முடியும். பிரச்சனையை உங்களால் தீர்க்க முடியும் என நினைக்க வேண்டும்.
எல்லா உயிரினங்களுக்கும் கூட பிரச்சனைகள் இருக்கதான் செய்கின்றன. வரும் பிரச்சனைகளை நீக்க தெரிந்திருக்க வேண்டும் அவன்தான் மனிதன்.
உங்களுக்கு தேவையான மருந்து உங்களிடமே உள்ளது. அம்மருந்தை நீங்கள்தான் தேடி பிடிக்கவேண்டும்.

----க.கௌ. முத்தழகர்-----