செவ்வாய், ஜனவரி 24, 2012






சக்தியை வழிபட பயம் நீங்கும்

உலகத்திலன் நாயகியாக வீற்றிருப்பவளே
முத்துமாரியம்ம!

உன் பாதங்களை சரணமாக பற்றுகின்றோம்.

கலகம் செய்யும் அரக்கர் பலர் எங்கள் கருத்திலே புகுந்து விட்டார்.

உன் திருவடிகளே எமக்கு என்றும் நிலைபேறுதரும்

என்று எண்ணி சரணடைந்து விட்டோம் தாயே!

துணிகளை வெளுக்க உவர் மண்ணுண்டு,

தோல் வெளுக்க சாம்பளுண்டு,

நவரத்தின மணிகளைக் கடைய சாணையுண்டு.

ஆனால் மக்கள் மனம் வெளுக்க வழியில்லையே அம்மா!

எங்கள் பிணிகளைத் தீர்க்க மாற்றுண்டு.

ஆனால், ஏற்றத் தாழ்வைப் போக்க வழியில்லையே தாயே!

மனத்தூய்மை தந்து, ஏற்றத்தாழ்வை நீக்கி, அறிவு தெளிவாவதற்காக

உன்னையே அடைக்கலம் என தஞ்சம் புகுந்தோம் அம்மா!

தேடி உன்னையே சரண் புகுந்தோம்

தேச முத்துமாரியம்மா! ஒப்பில்லாதவளே!

உன் திருவடிகளுக்கே ஏவல்பணி செய்து உன் அருளால் நல்வாழ்வு பெறுவேன்.

சக்தி என்ற திருநாமத்தைப் பாடி பக்திப்பரவசத்துடன் போற்றி வழிபட்டால் 

மனபயம் அனைத்தும் நீங்கிவிடும்.

உலகத்திற்கு ஆதாரம் சக்தி என்று அருமறைகள் கூறுகின்றன.

எந்த தொழில் புரிந்தாலும் எல்லாமே அன்னையின் தொழில்களே.

இன்பத்தை வேண்டி நின்றால் அவள் மகிழ்ச்சியுடன் நமக்கு 

அருள்புரிவாள் தன்னை நம்பியவர்களுக்கு வரங்கள் பல தருவாள்.

- பாரதியார் -

திங்கள், ஜனவரி 09, 2012






மனம்

ஞானத்தை அடைய விரும்புவனுக்கு உள்ள ஒரே எதிரி அவனுடைய சொந்த மனமே


தன்னை வென்றவன் தனக்குத் தானே நண்பனாகிறான்


உன்னைக் காட்டிலும் உனக்கு சிறந்த நட்பு ஒருவனும் கிடையாது


உனக்கு கொடிய பகைவனும் நீயே


இந்த இரு தன்மைகளும் நம் மனத்திடையே உள்ளன


மனம் நமக்கு நட்பாகும் போது உலகமே நட்பாகத் தோன்றும்


நம்மை நாமே வெறுக்கும் போது அது பகையாக தெரியும்


ஒருவனுக்கு தன் வீடே சிறந்த வாசஸ்தலம் மலை, காடு என்று சுற்றித் திரியத் தேவையில்லை வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைச்சிகரத்திற்குத் சென்றாலும் கடவுளைக் காணமுடியாது


உயிர்களுக்கு தீங்கிழைப்போர் உண்மையான பக்தராக மாட்டார்


எந்த உயிரையும் வெறுப்போரும் கடவுளின் தொண்டர் அல்ல


மாமிசம் புசிப்போருக்கு கடவுளை நெருங்க முடியாது


ஜீவஹிம்சை செய்பவரை கடவுள் மன்னிக்க மாட்டார்




உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையை கீதை ஆதாரமாகக் கொண்டது


தீமைகளை எதிர்தது போராடி, நன்மையை நிலைநாட்ட வேண்டும்.


கடவுளிடம் சரணாகதி அடைதலே யோகம்.


-பாரதியார்-.




















உழைப்பில் தான் சுகம்




உடலை வெற்றிகொள், 
அது எப்போதும் நீ சொன்னபடி கேட்க வெண்டும்,
அது சொன்னபடி நீ கேட்ககூடாது, 
அது மிருகம், நீ தேவன், 
அது யந்திரம், நீ இயக்குபவன்

எப்போதும் பாடுபடு,
எப்போதும் உழைத்து கொண்டிரு,
உழைப்பிலே சுகமிருக்கிறது.
வறுமை, நோவு முதலிய குட்டிப்பேய்கள் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப் பொய்விடும்.

தீர்க்காயுள், நோயின்மை, அறிவு, செல்வம் ஆகிய நான்கும் நமக்கு இன்றியமாதவை
அவற்றை இறைவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.

உன்னை மறந்துவிடு,
தெய்வத்தை மழுமையாக நம்பு
நியாயத்தையே உண்மையை பேசு இதைக் கடைபிடித்தால் எப்போதும் செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.

கண்ணாடி போன்ற மனதில், 
அம்பாளை தியானம் செய்தால், 
அவளது சாயல் மனதில் படும் அதில் கிடைக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை

எப்போதும் சிவனையே நினைத்திருங்கள்,
வானத்தில் செல்லும் சூரியன் உச்சிவானிற்கு வந்த்தும் எப்படி கிணற்றுக்குள் தெரிகிறதோ,
அதே போல் உனக்குள் சிவனைக் காணலாம்.






பாரதியார்