வியாழன், டிசம்பர் 08, 2011


தர்மயுத்தம் செய்ய துணிந்துவிடு ....

முடிவு காணமுடியாதவன்,
சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்,
மாறுதலே இல்லாதவன் இப்படி இவனை அறிந்து கொள், அறிந்து கொண்டு,
துன்பத்தை கைவிடு.

அல்லது, நீ இவனைத் தினமும் பிறந்து தினமும் சாகிறவன் என்று கருதினால்,
அப்போதும் திடந்தோளுடையவனே,
நீ இவன் பொருட்டு துன்பப்படுவது வீண்,

பிறந்தவர் இறப்பாரென்றால், இறந்தவர் பிறப்பாரன்றோ?
உன்னால் தவிர்க்கமுடியாத இந்த நிகழ்ச்சிக்கு நீ ஏன் கலங்குகிறாய்?

பாரதச் செல்வனே ; உயிர்களின் ஆரம்பம் தெளிவாகத் தெரியவில்லை,
நடுநிலைமை ( வாழும் காலம் ) தெளிவாக இருக்கிறது.
முடிவும் தெளிவாக இருக்கறது.
இதில் துன்பப்படுவதற்கு என்ன இருக்கிறது?

இந்த ஆன்மாவை வியப்போடு ஒருவன் பார்க்கிறான்,
வியந்து ஒருவன் பேசுகின்றான்,
வியப்போடு ஒருவன் கேட்கிறான்,
ஆயினும், எவனும் இவனை அறிந்ததில்லை.

அர்ஜுனா! எல்லாருடம்பிலும் உள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன்.
 ஆகவே, எந்த உயிரைப் பற்றியும் நீ வருந்தவே வேண்டாம்.

இது சுயதர்மம்தானா என்று எண்ணி,
நீ அஞ்சுவது பொருந்தாது.
ஒரு மன்னனுக்கு அறப்போரைக்காட்டிலும் சிறந்த சுயதர்மம் ஏது ?

நாம் தேடி போகலாம் ஒரு போர் தானே வருகிறதென்றால்,
அது வாசலைத் திறந்து வைத்திருக்கும் பொன்னுலகம் போன்றது.
இத்தகைய போர் வாய்ப்பு கிடைப்பதே ஒரு மன்னனுக்கு இன்பம்.

இந்த அறப்போரை நீ  நடத்தாமல் விடுவாயானால்,
அதனால் சுயதர்மத்தையும் புகழையும் கொன்று, பாவத்தை எய்துவாய்.

உலகில், உனக்கு நீங்காத பழி உண்டாகும்.
ஒரு காலத்தில் புகழ்பெற்றவன்,
மறு காலத்தில் பழி எய்துவது மரணத்தைவிடக் கொடியதல்லவா?

நீ பயந்துபோய் போரை விட்டு விலகியதாய் பெருந்தேர் வீரர்கள் கருதுவார்கள்.
உன் வலிமையையும், திறமையையும் பழிப்பார்கள்.
அதைவிட கொடிய துன்பம் ஏது?

உனக்கு வேண்டாதவர்கள், சொல்லக்கூடாத வார்த்தைகளை எல்லாம் சொல்லுவார்கள்.
உன் வலிமையையும்,
திறமையையும் பழிப்பார்கள்.
அதை விட கொடிய துன்பம் ஏது?

கொல்லப்பட்டால் சொர்க்கம்,
வெற்றி பெற்றால் ராஜபோகம்.
ஆகவே, போர் செய்ய துணிந்துவிடு,
எழுந்து நில்.

இன்பம், துன்பம்,
இழப்பு, பேறு
வெற்றி, தோல்வி - இவையெல்லாம் சமமே எனக்கருது.
நீ போரில் இறங்கிவிடு,
வீரன் பாவியாகாமல் இருக்க அதுதான் வழி.

இந்த முயற்சிக்கு அழிவே கிடையாது.
இது வரைமுறையற்ற செயற்கை நிலையுமல்ல,
இந்த தர்மத்தைச் சிறது அறிந்திருந்தாலும், அது ஒருவனைப் பெரும் பயத்திலிருந்து காப்பாற்றும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக