வெள்ளி, டிசம்பர் 09, 2011



விவேகானந்தரின் சொற்பொழிவுத் துளிகள்

விழித்தெழுந்து உன் இயல்பை நீ வெளிபடுத்து!!!!


இதோ ஒரு அற்புதமான உருவாக்கம்...!
உடலை தேராகவும்,
ஆண்மாவைச் சவாரி செய்பவராகவும்,
புத்தியைத் தேரோட்டியாகவும்,
மனத்தை கடிவாளமாகவும்,
புலன்களை குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ,
கடிவாளமாகவும் உறுதியாக உள்ளதோ,
தேரோட்டி(புத்தி) அதை நன்றாக பிடித்திருக்கின்றனவோ,
அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையான தன் குறிக்கோளை அடைவான்...

யாருடைய குதிரைகள் (புலன்கள்) அடக்கப்படாமலும்,
கடிவாளம் (மனம்) உறுதியாகப் பிடிக்கபடாமலும் இருக்கின்றனவோ,
அவன் அழிவை நோக்கி போகின்றான்...

நீங்களே தூய்மை பொருந்தியவ்ர்கள் என்பதை உளமாற நம்புங்கள்,
ஓ மாபெரும் வீரனே!
கண்விழித்து எழுந்திரு,
இந்த உறக்கம் உனக்குப் பொருந்தது விழ்த்துக் கொள்,
எழுந்து நில்.
துன்பப்படுவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே...

எல்லாம் வல்ல ஆற்றல்படைத்தவனே!
விழித்தெழுந்து உன் இயல்பை நீ வெளிபடுத்து.
உன்னை நீயே பாவி என்று நினைப்பது உனக்கு பொருந்தாது.
உன்னை நீயே பலவீனன் என்று கருதுவதும் உனக்குப் பொருந்தாது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக