சனி, டிசம்பர் 10, 2011


உன்றன் போர்க்கு அஞசுவேனோ பொடியாக்குவேன் உன்னை
மாயையே...!


மாயையைப் பழித்தல்

உண்மை அறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?
மாயையே !

மனத்தின் உண்மையுள்ளாரை நீ செய்வது
ஒன்றும் உண்டோ !
மாயையே !

எத்தனை கோடி படை கொண்டு வந்தாலும் மாயையே..
சித்தத் தெளிவெனுந் தீயின் முன் நிற்பாயோ ?
மாயையே!

என்னைக் கெடுப்பதற்கு எண்ணமுற்றாய் மாயையே !
நான் உன்னைக் கெடுப்பது உறுதி என்று உணர்
மாயையே !

சாகத் துணியிற் சமுத்திரமும் மட்டு மாயையே!
இந்தத் தேகம் பொய் என்று உணர்.
தீரரையென் செய்வாய்
மாயையே !

இருமை அழிந்த பின் எங்கிருப்பாய் அற்ப மாயையே!
தெளிந்து ஒருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பாயோ !
மாயையே !

நீதரும் இன்பத்தை நேர் என்று கொள்வேனா மாயையே !
சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லரசாட்சியை
மாயையே !

எண்ணிச்சை கொண்டு உன்னை எற்றிவிட வல்லேன் மாயையே !
இனி உன்னிச்சை கொண்டெனக் கொன்றும் வராது காண்
மாயையே !

யார்க்கும் குடியல்யேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே !
உன்றன் போர்க்கு அஞசுவேனோ பொடியாக்குவேன் உன்னை
மாயையே...!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக