உழைப்பில்
தான் சுகம்
உடலை வெற்றிகொள்,
அது எப்போதும் நீ சொன்னபடி கேட்க வெண்டும்,
அது சொன்னபடி நீ கேட்ககூடாது,
அது மிருகம், நீ தேவன்,
அது யந்திரம், நீ இயக்குபவன்
அது எப்போதும் நீ சொன்னபடி கேட்க வெண்டும்,
அது சொன்னபடி நீ கேட்ககூடாது,
அது மிருகம், நீ தேவன்,
அது யந்திரம், நீ இயக்குபவன்
எப்போதும் பாடுபடு,
எப்போதும் உழைத்து கொண்டிரு,
உழைப்பிலே சுகமிருக்கிறது.
வறுமை, நோவு முதலிய
குட்டிப்பேய்கள் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப் பொய்விடும்.
தீர்க்காயுள்,
நோயின்மை, அறிவு, செல்வம் ஆகிய நான்கும் நமக்கு இன்றியமாதவை
அவற்றை
இறைவனிடம் கேட்டுப் பெற வேண்டும்.
உன்னை
மறந்துவிடு,
தெய்வத்தை மழுமையாக நம்பு
நியாயத்தையே உண்மையை பேசு இதைக்
கடைபிடித்தால் எப்போதும் செய், அனைத்து இன்பங்களையும் பெறுவாய்.
கண்ணாடி போன்ற மனதில்,
அம்பாளை தியானம் செய்தால்,
அவளது சாயல் மனதில் படும் அதில் கிடைக்கும் சுகம் வேறு
எதிலும் இல்லை
எப்போதும் சிவனையே
நினைத்திருங்கள்,
வானத்தில் செல்லும் சூரியன் உச்சிவானிற்கு வந்த்தும் எப்படி
கிணற்றுக்குள் தெரிகிறதோ,
அதே போல் உனக்குள் சிவனைக் காணலாம்.
பாரதியார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக